அன்பார்ந்த சகோதர சகோதரிகளே !
இந்த மார்க்க அறிவு போட்டி நடத்துவதன் நோக்கம் என்னவென்றால் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் மார்க்கம் போய்ச்சேர வேண்டும் என்பதாகும்.
நமக்கு அருளப்பட்ட இந்த குர்ஆனையும் நபி(ஸல்) வழிமுறைகளையும் (ஹதீஸ்) பொருளறிந்து படித்தால் அதிகமதிகம் நன்மைகளையும் வாழ்க்கையில் நேரான வழியையும் பெறமுடியும் அதேசமயம் மார்க்கம் என்ற பெயரால் நாம் ஏமாறாமல் இருக்க முடியும்.
மேற்குறிப்பிட்ட அனைத்து மார்க்க அறிவு செய்திகளையும் இறைவனுடைய குர் ஆனில் இருந்தும் நபி(ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இருந்தே சுட்டிக்காட்டியுள்ளோம்.
இதன் அடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் கூறியதாவது :- நான் (நபி (ஸல்))காட்டித்தராத எந்த ஒரு அமலும் நிராகரிக்கப்படும்.
இந்த அடிப்படையில் நாம் எந்த அமல்களை செய்தாலும் குர் ஆனிலும், ஹதீஸிலும் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்ததா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக்கடமை ஆகும்.
இதையே தான் நாம் நன் மதிப்பு வைத்திருக்கும் இமாம்கள் ஹனபி (ரஹ்), ஷாபி(ரஹ்), மாலிக்கி(ரஹ்), ஹம்பலி(ரஹ்) கூறுகிறார்கள். இதை ஆதாரத்துடன் கீழே காண்க.
ஹனபி மத்ஹப் இமாம் அபூ ஹனீபா(ரஹ்) அவர்கள் கூறியதாவது.
எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நாம் முடிவு செய்தோம் என்பதை அறியாமல் எங்கள் சொல்லை எடுத்து நடப்பது எவருக்கும் ஹலால் இல்லை
ஆதாரம்: அல் இன்திகா பக்கம் 145, ஹாஷியா இப்னுல் ஆபிதீன் பாகம் 6, பக்கம் 293 ரஷ்முல் முப்தீ பக்கம் 29,32
இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
நான் (சிலநேரங்களில்) சரியாகவும் (சிலநேரங்களில்) தவறாகவும் முடிவெடுக்கக்கூடிய ஒரு சராசரி மனிதன் தான். எனது முடிவுகளை நீங்களே ஆராயுங்கள் ! குர்ஆனுக்கும் நபிவழிக்கும் பொருத்தமானவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்! குர்ஆனுக்கும் நபிவழிக்கும் பொருத்தமில்லாதவற்றை விட்டுவிடுங்கள்!
ஆதாரம்: ஜாமிவு இப்னி அப்தில்பர் பாகம் 2, பக்கம் 42, உஸ்முல் அஹ்காம், பாகம் 6 பக்கம் 149 ஈகாழுல் ஹிமம், பக்கம் 62
இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
எனது நூலில் நபி(ஸல்) அவர்களின் சுன்னத்துக்கு மாற்றமானதைக் கண்டால் ரசூலுடைய சுன்னத்தையே (மக்களிடம்) சொல்லுங்கள் ! என் கூற்றை விட்டுவிடுங்கள்!
ஆதாரம்: அல் மஸ்மூவு(நவ்வி) பாகம் 1 பக்கம் 63 இப்னு அஸாகிர் (9,10,15)
ஈகாழுல் ஹிமம் பக்கம் 706 அல் இஹ்திஜாஜ் பாகம் 2
இமாம் ஹம்பலி(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(இமாம்) அபூஹனீபா, இமாம் மாலிக், இமாம் அஸ்ஸானீ ஆகியோரின் கருத்துக்கள் அவர்களின் அபிப்பிராயமே, உண்மையான ஆதாரம் நபித்தோழர்களின் சரியான அறிவிப்பில் உள்ளது.
ஆதாரம் : ஈகாளுல் ஹிமாம், பக்கம் 113
நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களை நிராகரிப்பவன் அழிவின் விளிம்பிலே இருக்கிறான்
ஆதாரம்: இப்னுல் ஜவ்ஸி பக்கம் 182
எனவே நாம் அனைவரும் திருக்குர்ஆனை பொருளுணர்ந்து படிக்க கூடியவர்களாகவும் அமல்களை பாழாக்கக்கூடிய செயல்களிலிருத்து தவிர்ப்பவர்களாகவும் நம்மை அல்லாஹ் காக்க வேண்டும்.
நாம் அனைவரும் குர்ஆனிலும் நபி வழியிலும் ஒன்றுபட்டு நடந்தால் நம்மிடம் பிரிவுக்கு வழியே இல்லை என்பதை கூறிக்கொள்கிறோம்.
முதலாம் ஆண்டு ரமலான் இஸ்லாமிய பொது அறிவு போட்டி – வினாக்களுக்கான விடைகள்
No comments:
Post a Comment